இலங்கை செய்தி

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல்ஆகஸ்ட் 06 வரையான காலப்பகுதிக்குள் 13 லட்சத்து 86 ஆயிரத்து 228 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இலங்கைக்கு 2026 ஜனவரி 01 முதல்ஆகஸ்ட் 06 வரையான காலப்பகுதிக்குள் 13 லட்சத்து 86 ஆயிரத்து 228 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து3 லட்சத்து 46 ஆயிரத்து 57 பேரும், பிரித்தானியாவில் இருந்து ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 323 பேரும் , சீனாவில் இருந்து 91 ஆயிரத்து 538 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

ஜேர்மனியில் இருந்து 81 ஆயிரத்து 101 பேரும், ரஷ்யாவில் இருந்து 79 ஆயிரத்து 628 பேரும், பிரான்ஸில் இருந்து 67 ஆயிரத்து 07 பேரும் மேற்படி காலப்பகுதிக்குள் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியாவில் இருந்து 68 ஆயிரத்து 868 பேரும், கனடாவில் இருந்து 27 ஆயிரத்து ,937 பேரும் வருகை தந்துள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு சுற்றுலாத்துறை பெரும் பங்களிப்பு வழங்கிவருகின்றது.

கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் 06 ஆம் திகதிவரையான காலப்பகுதிக்குள் 42 ஆயிரத்து 810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை