இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் எதிர்க்கவில்லை: நீதி அமைச்சர் விளக்கம்

அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் உத்தேச 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சமூகத்தில் கருத்தாடல் ஏற்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.  அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியம் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் எவ்வாறு எதிரணியை ஒடுக்கும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெளிவுபடுத்தினால், அதற்குரிய பதிலை வழங்க முடியும். அவ்வாறு இல்லாமல் வேண்டுமென்றே விமர்சிப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், “இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் ஒரு சுயாதீன அமைப்பாகும். 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அச்சங்கத்தினரும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

இதனை எமக்கு எதிரான நடவடிக்கையாக நாம் பார்க்கப்போவதில்லை. இவ்வாறு சமூகத்தில் சட்டமூலம் தொடர்பில் கருத்தாடல் ஏற்படுவது நல்லதொரு ஜனநாயகப் பண்பாகும்” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது எவ்வாறு எதிரணிக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக அமையும் என்றும் நீதி அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை