எரிபொருள் விலையேற்றம்: அரசுமீது எதிர்க்கட்சி தலைவர் விமர்சனக் கணை தொடுப்பு
நாடளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர் மற்றும் சர்வதேச வயோதிபர் தினங்கள் கொண்டாடப்படும் வேளையில், தற்போதைய அரசு சிறார்கள், வயோதிபர்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரஜைகளின் கன்னத்தில் அறைந்தால் போல் எரிபொருள் விலைகளைக் கூட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசனம் தெரிவித்தார். இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றவும், நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி அதிகாரங்களைப் பெறவும் தற்போதைய அரசின் பிரதிநிதிகள், துறைமுகத்தில் இறக்கப்படும் […]













