கொழும்பு, டெல்லி உறவை மேலும் வலுப்படுத்த இணக்கம்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினரை இன்று காலை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
ரில்வின் சில்வாவுடனான உரையாடலுக்கு சந்திப்புக்கு பிறகு, எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அவரையும் இலங்கை பிரதிநிதிகளையும் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
“நமது இரு நாடுகளுக்கு இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நல்லதொரு கலந்துரையாடல் நடைபெற்றது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நம்பிக்கையான கூட்டாளி என்ற முறையில், இலங்கையின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும்” என்றும் அவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக-ஜேவிபி உறவுகளை வலுப்படுத்துவது, அமைப்பு ரீதியான அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ள வழிவகுப்பது மற்றும் இரு அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கம் நோக்கமாகும்.
ரில்வின் சில்வா தலைமையிலான, ஜேவிபி குழுவில் சந்திரிகா அதிகாரி (மத்திய குழு உறுப்பினர்), அபுபக்கர் ஆதம்பாவா (நாடாளுமன்ற உறுப்பினர்), கபிலன் சுந்தரமூர்த்தி (மாநோக்கமாகும்வட்டக் குழு உறுப்பினர்) மற்றும் கல்பனா மதுபாஷினி (சர்வதேச விவகார உறுப்பினர்) ஆகியோரும் உள்ளடங்கியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகு ரில்வின் சில்வாவின் இரண்டாவது இந்திய விஜயம் இதுவாகும்.




