கைது செய்யப்படுவதை தடுக்கும் கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், தம்மை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரீட் மனுவைச் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோரை உள்ளடக்கிய மூவரடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பல கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.




