உலகம் செய்தி

Nvidia விவகாரம்: ஜென்சனுக்காகக் களமிறங்கிய எலான் மஸ்க்

அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் அதே பதவியில் அமர்த்தக் கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள இணையவழி மனுவில் 1.78 இலட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகிய ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் அதே பதவியில் அமர்த்தக் கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள இணையவழி மனுவில் 1.78 இலட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.

திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் மற்றும் சீன உளவாளி எனச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவருடனான தொடர்பு குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை ஜென்சன் ஹுவாங் பதவி விலகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருக்கு ஆதரவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ‘Stand With Jensen’ என்ற பிரசாரத்தில் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ரெப்ளிட் நிறுவனத்தின் அம்ஜத் மசாத், எபிக் கேம்ஸ் நிறுவனத்தின் டிம் ஸ்வீனி உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பத் துறைப் பிரமுகர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

மனுவில் கையெழுத்திட்டவர்களில் 8,400க்கும் அதிகமானோர் என்விடியாவின் தற்போதைய ஊழியர்கள் என்றும், சுமார் 90,000 பேர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் என்றும் தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். எனினும், இந்த விபரங்கள் சுயமாக வழங்கப்பட்டவை என்பதால் அவை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜென்சன் ஹுவாங் மீண்டும் தலைமைப் பொறுப்புக்கு வருவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளார். அவர் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டிருப்பார் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில முக்கிய முதலீட்டாளர்களும் ஜென்சன் ஹுவாங்குக்குப் பதிலாக புதிய தலைமை நிர்வாக அதிகாரியை அவசரமாக நியமிக்க வேண்டாம் என என்விடியா நிர்வாகக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசென்ட், நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக வெளிநபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும், நிறுவனத்தில் பெரியளவிலான மாற்றங்கள் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், என்விடியா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிதி அறிக்கை செவ்வாய்க்கிழமை சந்தை வர்த்தகம் நிறைவடைந்த பின்னர் வெளியிடப்படவுள்ளது.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய முக்கியத்துவம் பெற்றுள்ள என்விடியா நிறுவனத்தின் தலைமைத்துவ நெருக்கடி தொழில்நுட்பத் துறையிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி