இந்தியா செய்தி

ஈரான் போரால் இந்தியாவின் பணவீக்கம் 11.39 சதவீதமாக உயர்வு

இந்தியாவில் கடந்த செப்டெம்பர் மாதத்திற்கான வருடாந்த மொத்த விலை பணவீக்கம் India's annual wholesale inflation 11.39 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த செப்டெம்பர் மாதத்திற்கான வருடாந்த மொத்த விலை பணவீக்கம் India’s annual wholesale inflation 11.39 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோகத் தடைகள் மற்றும் எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவை பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.92 சதவீதமாகப் பதிவான மொத்த விலை பணவீக்கம், செப்டெம்பரில் 11.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்த 10.18 சதவீதத்தையும் விட அதிகமாகும்.

குறிப்பாக, பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் மொத்த விலைகள் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 57.32 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. உணவுப் பொருட்களின் மொத்த விலை பணவீக்கமும் ஆகஸ்ட் மாதத்தில் 7.05 சதவீதமாக இருந்த நிலையில், செப்டெம்பரில் 8.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.

அதேவேளை, உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிப்பும் பணவீக்க உயர்வுக்குப் பங்களித்துள்ளது. உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு ஆகஸ்ட் மாதத்தில் 8.37 சதவீதமாக இருந்த நிலையில், செப்டெம்பரில் 9.76 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் சில்லறை விலைகளைக் கட்டுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட இந்திய ரிசர்வ் வங்கி, பணவீக்க அழுத்தங்கள் அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த வாரம் முதன்முறையாக வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது.

இந்தியாவில் மொத்த விலைப் பணவீக்க அழுத்தம் அடுத்த ஆண்டுவரை நீடிக்கக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி