இலங்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் லோகு பட்டியின் தம்பி சுட்டுக் கொலை

  • October 1, 2026
  • 0 Comments

அஹுங்கல்ல, வெலிகண்டப் பகுதியில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ‘லோகு பட்டி’ (Loku Patty) என்பவரின் தம்பி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இன்று (01) இரவு சுமார் 8:10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 35 வயதான லந்துவாஹந்தி சுகத் நுவான் குமார டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் […]

உலகம்

நேபாளத்தில் பனிச்சரிவு – முகாம் அமைத்த 15 தொழிலாளர்கள் பலி

  • October 1, 2026
  • 0 Comments

நேபாளத்தில் வெளிநாட்டு மலையேறுபவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டு வந்த மலை முகாம் ஒன்றை பனிச்சரிவு மூடியுள்ளது. இதில் குறைந்தது 15 நேபாளத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு மனங் மாவட்டத்தில் உள்ள 7,126 மீட்டர் (23,379 அடி) உயரமுள்ள ஹிம்லுங் ஹிமால் Himlung Himal  மலையின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள தேசிய மலை வழிகாட்டிகள் சங்கத்தின் (NNMGA) தலைவர் துல் சிங் […]

உலகம்

லிபியாவில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – தாமதமாகும் கல்வி நடவடிக்கை

  • October 1, 2026
  • 0 Comments

ஊதியம் மற்றும் பணிச்சூழல் தொடர்பான விவகாரங்களுக்காக லிபியாவில் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக லிபியா முழுவதும் பாடசாலைகளின்  செயல்பாட்டைப் பாதிப்பதோடு, புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தையும் தாமதப்படுத்துகிறது. செப்டம்பர் 13 அன்று ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். தலைநகர் திரிபோலியில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெளியே அவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு வாரங்கள் தொடர்ந்த இந்த போராட்டம் தற்போது ,   நாடு தழுவிய அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்தமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறைந்த […]

ஐரோப்பா

ஐரோப்பாவை உலுக்கிய சைபர் தாக்குதல்கள் – 16 வயது இளைஞர் கைது

  • October 1, 2026
  • 0 Comments

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சுமார் 1,000 ரான்சம்வேர் தாக்குதல்கள் தொடர்பாக 16 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்பானிய பொலிஸார் அறிவித்துள்ளனர். ஐரோப்பா தழுவிய விசாரணையின் ஒரு பகுதியாக, கில்செக் (KillSec) என்ற ஹேக்கர் குழுவின் முக்கிய இயக்குநராக சந்தேகிக்கப்படும் இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அலிகாண்டே நகரில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் ருமேனிய நாட்டைச் சேர்ந்தவர் என்று ஸ்பெயின் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கில்செக் KillSec  குழுவின் […]

உலகம் ஐரோப்பா

டீசல் பற்றாக்குறை – அவசரகால கையிருப்பை விடுவிக்க பிரித்தானியா பேச்சுவார்த்தை

  • October 1, 2026
  • 0 Comments

அவசரகால டீசல் கையிருப்பை வெளியிடுவது குறித்து பிரித்தானியா தனது நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள், எரிபொருள் கையிருப்பைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க இன்றைய தினம் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டதாக ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் தங்களது கையிருப்பை வெளியிடாவிட்டால், அந்த நாடுகளுக்கு அமெரிக்க டீசல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படும் என்று […]

வவுனியா, செக்கடிப்பிலவு பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இலங்கை செய்தி

மின்னல் தாக்கி இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்

  • October 1, 2026
  • 0 Comments

வவுனியா, செக்கடிப்பிலவு பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். செக்கடிப்பிலவு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ஜோசப் அன்ரனி என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். இன்று மாலை வவுனியாவின் பல பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் மேற்படி இளைஞர் அந்தப் பகுதியிலுள்ள மைதானத்தில் இருந்தவேளை, திடீரென மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அவர் அருகிலிருந்த மரத்தின் கீழ் ஒதுங்கிய வேளையில், எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே […]

AFCON 2027 தகுதிச்சுற்று போட்டியில் காம்பியாவுக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து, கானா தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து Carlos Queiroz விலகியுள்ளார். செய்தி விளையாட்டு

கருப்பு நட்சத்திரங்களின் ‘பயிற்சி நாயகன்’ ராஜினாமா

  • October 1, 2026
  • 0 Comments

AFCON 2027 தகுதிச்சுற்று போட்டியில் காம்பியாவுக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து, கானா தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து Carlos Queiroz விலகியுள்ளார். இது ‘பிளாக் ஸ்டார்ஸ்’ (Black Stars) என்று அழைக்கப்படும் கானா அணிக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. போர்த்துகீசியப் பயிற்சியாளரான 73 வயதான Carlos Queiroz-ஐ மீண்டும் நியமித்த ஒரு மாதத்திற்குள்ளேயே, பரஸ்பர ஒப்புதலின் அடிப்படையில் அவருடனான ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கானா கால்பந்து சம்மேளனம் (GFA) வியாழக்கிழமை தெரிவித்தது. […]

ஆசிய விளையாட்டுப் போட்டியின் T20 கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இலங்கையின் இரண்டாம் கட்ட அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் தனது எதிரியான பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. செய்தி விளையாட்டு

பரம எதிரிகள் இறுதி ஆட்டத்தில் மோதல்: அனல் பறக்கவுள்ள ஆட்டம்

  • October 1, 2026
  • 0 Comments

ஆசிய விளையாட்டுப் போட்டியின் T20 கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இலங்கையின் இரண்டாம் கட்ட அணியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தங்கப் பதக்கத்திற்கான இறுதிப்போட்டியில் தனது எதிரியான பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. ஆசிய விளையாட்டு வரலாற்றுப் பக்கங்களில் இவ்விரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுவது இதுவே முதல்முறையாகும். கடந்த ஓராண்டாக இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் அரசியல் பதற்றங்கள் கிரிக்கெட் களத்திலும் எதிரொலித்து வரும் நிலையில், இப்போட்டிக்குப் பிறகு […]

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, மார்ஷல் தீவுகளில் அமெரிக்கா ஏற்படுத்திய அணுசக்தி பாதிப்புகளின் வடுக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், மருத்துவச் சேவைகளை வழங்குவதோடு இரகசிய ஆவணங்களையும் அமெரிக்கா வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அணுஆயுதச் சோதனைகள் – நீடிக்கும் துயரம்: அமெரிக்காவிடம் நீதி கோரும் மார்ஷல் தீவுகள்

  • October 1, 2026
  • 0 Comments

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, மார்ஷல் தீவுகளில் அமெரிக்கா ஏற்படுத்திய அணுசக்தி பாதிப்புகளின் வடுக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், மருத்துவச் சேவைகளை வழங்குவதோடு இரகசிய ஆவணங்களையும் அமெரிக்கா வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள தாழ்வான பவளத் தீவுக் கூட்டங்களான மார்ஷல் தீவுகளில், 1946 முதல் 1958 வரையிலான காலத்தில், 1954-இல் பிகினி அடோலில் நடத்தப்பட்ட “காஸில் பிராவோ” (Castle Bravo) சோதனை உட்பட 67 அணுஆயுதச் […]

உலகம்

சிங்கப்பூரில் அரச அணுசரணையுடன் உருவாக்கப்பட்டுள்ள டேட்டிங் செயலி

  • October 1, 2026
  • 0 Comments

சிங்கப்பூரில் இளம்வயதினர் தங்கள் துணையை கண்டுப்பிடிக்க பொருத்தம் பார்க்கும் செயலி ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நாட்டின் அரசாங்க தொழில்நுட்ப முகமை (GovTech), 21 முதல் 35 வயதுக்குட்பட்ட பொதுத்துறை ஊழியர்களுக்காக ‘ஃபர்ஸ்ட்டேட்’ (FirstDate) என்ற ஒரு பொருத்தம் பார்க்கும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, வழக்கமான டேட்டிங் செயலிகளில் முடிவில்லாமல் ஸ்வைப் செய்வதிலிருந்து பயனர்களை விடுவிப்பதாக உறுதியளிக்கிறது. அதற்குப் பதிலாக, அவர்கள் ஒரு விரிவான கேள்வித்தாளுக்குப் பதிலளித்து, பொருத்தம் பார்க்கும் பணியை நோபல் பரிசு பெற்ற ஒரு […]