ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் தோல்வி: மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமாகிறதா பிரித்தானியா?

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் மூலம் பிரித்தானியா பெற்ற நன்மைகளை விட இழப்புகளே அதிகம் எனப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதன் மூலம் பிரித்தானியா பெற்ற நன்மைகளை விட இழப்புகளே அதிகம் எனப் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை நடைபெறும் லண்டன் லார்ட் மேயர் விருந்தில் உரையாற்றும்போது, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதால் வர்த்தக நிறுவனங்களுக்கு பல தடைகள் ஏற்பட்டதுடன், ‘கட்டுப்பாட்டை மீட்டெடுப்போம்’ என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள பிரித்தானியா – ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் உணவு வர்த்தகம், எரிசக்தி மற்றும் இளைஞர்களின் பயணம், வேலைவாய்ப்பு தொடர்பான புதிய ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடவுள்ளார்.

எனினும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக கன்சர்வேட்டிவ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்காலத்தில் எத்தகைய உறவைப் பேணுவது என்பது குறித்து பல்வேறு வாய்ப்புகளின் சாதக, பாதகங்களை ஆராய விரும்புவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் பெரியளவிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படமாட்டாது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

புதிய ஒப்பந்தங்கள் மூலம் வர்த்தகச் செலவுகளைக் குறைத்து, நுகர்வோருக்கான விலைகளைக் கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் நம்புகிறது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை வாக்குரிமையின்றி ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கிடையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், பிரெக்ஸிட் விவகாரத்தை மீண்டும் முன்னிலைப்படுத்துவது அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவை மீண்டும் நெருக்கமாக்குவது தொடர்பான விவாதம் பிரித்தானிய அரசியலில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி