ஐரோப்பா

பிரான்சில் ஓய்வூதியம் பெறும் மூதாட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை

பிரான்சில் ஓய்வூதியம் பெறும் மூதாட்டி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அக்கப்பக்கத்தினர் வழங்கிய தகவலுக்கு அமைய , 93 வயதான மேரி-லூயிஸின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் அங்கு குளியலறை ஒன்றில் இருந்து அவரை நிர்வாணக்கோலத்தில் சடலமாக மீட்டனர்.

அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து விசாரணைகளை துரிதப்படுத்திய பொலிஸார் அவருடைய சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைகளில் அவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை ஊர்ஜிதமானது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் 34 வயதான சூடான் நாட்டு புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்