ரணிலின் பாதுகாப்பு அதிகாரிமீது தாக்குதல்: ஒளிப்பதிவாளர் கைது
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வெளியே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், தனியார் ஊடக நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (செப்டம்பர் 30) விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு இணங்க, இச்சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று (அக்டோபர் 01) கொம்பனித்தெரு காவல் நிலையத்திற்கு வருகை தந்தபோதே அவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த ஒளிப்பதிவாளர் சட்டத்தரணி ஒருவருடன் காவல் […]













