ஜப்பானில் வெளிநாட்டினருக்கான நிரந்தர வசிப்பிட அனுமதி கட்டணம் 20 மடங்கு உயர்வு
வெளிநாட்டினருக்கான நிரந்தர வசிப்பிட அனுமதி கட்டணத்தை 20 மடங்கு உயர்த்த ஜப்பான் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை இன்று (01) முதல் அமலுக்கு வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டில் அதிகரித்து வரும் வெளிநாட்டு மக்கள்தொகையை நிர்வகிக்கும் நோக்கில் ஜப்பானிய அரசாங்கம் குடிவரவுக் கொள்கைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிநாட்டினருக்கான நிரந்தர வசிப்பிட அனுமதி கட்டணம் 10,000-லிருந்து 200,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜப்பானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிரந்தர வசிப்பிடத்தை நாடுபவர்கள், ஜப்பானிய மொழித் திறன் உட்பட பல அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் வெளிநாட்டு அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.




