ஆப்கானிஸ்தானில் 5.3 ரிக்டர் அளவில் நிலடுக்கம் பதிவு
ஆப்கானிஸ்தானில் 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) இன்று தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை 6:59:20 மணிக்கு 126 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபூலுக்கு வட-வடமேற்கே சுமார் 165 கி.மீ தொலைவில், 35.981 வடக்கு அட்சரேகை மற்றும் 68.700 கிழக்கு தீர்க்கரேகை அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் அடையாளம் கண்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.




