ஐரோப்பா

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள மாணவர்கள் போராட்டம் – பலர் காயம்

  • October 2, 2026
  • 0 Comments

பிரான்ஸில் மாணவர்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் நேற்றைய தினத்தில் இருந்து தீவிரமடைந்துள்ளன. பல நகரங்களில் மாணவர்கள் குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்தும், பாடசாலைகளுக்கு வெளியே தடுப்புக் காவல் அமைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெரிசல் மிகுந்த வகுப்பறைகள், ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பழுதடைந்த தளபாடங்கள் உள்ளிட்ட குறைகளை நிவர்த்தி செய்யக்கோரி பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிராந்தியக் கல்வி அதிகாரிகள், நிர்வாகத் தரப்பினர் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் தகவல்களின்படி, பல உயர்நிலைப் பாடசாலைகளின் அதிபர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

ஐரோப்பா

ஃபின்லாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் திருட்டு முயற்சி

  • October 2, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளில் நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் தொடர்ச்சியான அத்துமீறல் மற்றும் திருட்டு முயற்சிகள் குறித்து விசாரித்து வருவதாக ஃபின்லாந்து அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இது உறுதிப்படுத்தப்பட்டால், அது “ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்” என்று அந்நாட்டின் ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் Alexander Stubb  விவரித்துள்ளார். இந்தச் சம்பவங்கள் குறித்த ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து, பல அரசியல்வாதிகளின் வீடுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அத்துமீறல்கள் மற்றும் ஊடுருவல் முயற்சிகள் நடந்திருப்பது குறித்து நாடாளுமன்றத்திற்குத் தகவல் கிடைத்துள்ளதாக சபாநாயகர் ஜுஸ்ஸி ஹல்லா-அஹோ  Jussi […]

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் ஈரானைக் குறிவைக்கப் பயன்படுத்தும் பிரித்தானியாவின் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் , பிரித்தானியா -ஈரான் குடியுரிமை பெற்ற 25 வயது நபர் ஒருவரைப் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

RAF Fairford சம்பவம்: ஈரான் வம்சாவளி இளைஞன் லண்டனில் கைது

  • October 2, 2026
  • 0 Comments

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் ஈரானைக் குறிவைக்கப் பயன்படுத்தும் பிரித்தானியாவின் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் , பிரித்தானியா -ஈரான் குடியுரிமை பெற்ற 25 வயது நபர் ஒருவரைப் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்கு பிரித்தானியாவில் உள்ள RAF Fairford விமானப்படைத் தளத்திற்கு அருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 20 வயதிற்குட்பட்ட 5 பிரித்தானிய இளைஞர்களைப் பயங்கரவாதத் தடை மற்றும் வெடிபொருள் சட்டங்களின் கீழ் பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]

ஐரோப்பா

புகலிடம் கோருபவர்களை ஒட்டுமொத்தமாக திருப்பியனுப்ப யோசனை – கிரீஸின் சர்ச்சைக்குரிய முன்மொழிவு

  • October 2, 2026
  • 0 Comments

சட்டவிரோத குடியேறிகளின் பெருமளவிலான வருகையின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவதற்கான உரிமையை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என கிரேக்க குடியேற்றம் மற்றும் தஞ்சம் கோரும் அமைச்சர் தானோஸ் பிளெவ்ரிஸ் Thanos Plevris முன்மொழிந்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் ஏற்படுத்தும். அத்துடன் குடியேறிகளின் தஞ்சம் கோரும் கோரிக்கைகளைத் தனித்தனியாக மதிப்பீடு செய்யாமலேயே அவர்களைத் திருப்பி அனுப்ப அனுமதிக்கும். இதன் விளைவாக, தற்போதைய ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ள “கூட்டுத் […]

உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸில் மருத்துவ ஹெலிகாப்டர் விபத்து – இருவர் பலி

  • October 2, 2026
  • 0 Comments

லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள கேட்டலினா தீவுக்கு அப்பால், நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து கடந்த புதன்கிழமை இடம்பெற்ற நிலையில் அன்றில் இருந்து காணாமல்போன ஐந்தாவது நபரை தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலோரக் காவல் படை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் (divers) உள்ளிட்ட அவசரக்கால […]

மேற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் (COVID-19) பெருந்தொற்று காலத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தைச் சிறைச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் சிறைச்சாலையாக மாறும் COVID-19 தடுப்பு மையம்

  • October 2, 2026
  • 0 Comments

மேற்கு ஆஸ்திரேலியாவில் கோவிட் (COVID-19) பெருந்தொற்று காலத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையத்தைச் சிறைச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. இதனைத் தேவைக்கேற்ப மறுசீரமைப்பது குறித்து ஆய்வு செய்ய நீதித்துறை சார்பில் கட்டிடக் கலை வல்லுநர்கள் (Architects) அழைக்கப்பட்டுள்ளனர். பெர்த் நகரின் மையப்பகுதியில் இருந்து வடகிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள, 500 படுக்கைகள் கொண்ட இந்த ‘தேசிய மீள்தன்மை மையம்’ (Centre for National Resilience), 2022-இல் கட்டி முடிக்கப்பட்டதில் இருந்தே பயன்பாடின்றி முடங்கிக் […]

இலங்கை

இலங்கைக்கு 15 மைல் தொலைவில் சிக்கியுள்ள ஈரானின் எண்ணெய் கப்பல்கள்

  • October 2, 2026
  • 0 Comments

சுமார் 20 ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்கள் இலங்கையின் தென்மேற்கு கடற்கரையிலிருந்து 15 மைல் தொலைவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் சில கப்பல்களில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல்கள், பொருளாதாரத் தடைகளுக்கு உட்பட்ட ஈரானிய கச்சா எண்ணெயை  சீனாவுக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. ஈரானின் எண்ணெய் வர்த்தகத்துடன் தொடர்புடைய கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீதான அழுத்தத்தை அமெரிக்க அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. […]

கிரீஸின் வடபகுதியில் அமைந்திருந்த கொரோனியா (Koroneia) ஏரி, கடும் வறட்சி தொடங்குவதற்கு முன்பாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு முக்கியமான ஈரநிலமாகத் திகழ்ந்தது. ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள், பூநாரைகள் (Flamingos), சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் புகலிடமாகவும் அது விளங்கியது. ஐரோப்பா செய்தி

காலநிலையின் கோரத் தாண்டவம்: காணாமல்போகும் அபாயத்தில் ஏரி

  • October 2, 2026
  • 0 Comments

கிரீஸின் வடபகுதியில் அமைந்திருந்த கொரோனியா (Koroneia) ஏரி, கடும் வறட்சி தொடங்குவதற்கு முன்பாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு முக்கியமான ஈரநிலமாகத் திகழ்ந்தது. ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள், பூநாரைகள் (Flamingos), சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் புகலிடமாகவும் அது விளங்கியது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக நிலவும் குறைவான மழைப்பொழிவு மற்றும் அளவுக்கு அதிகமான நீர்ப்பாசனம் காரணமாக, ஒரு காலத்தில் கிரீஸின் ஐந்தாவது பெரிய ஏரியாக இருந்த கொரோனியா, தற்போது தன் பழைய அளவில் பத்தில் ஒரு […]

இலங்கை - இந்திய அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்தவேளை, அணிவகுப்பு மரியாதையின் போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  அரசியல் இலங்கை செய்தி

ரணிலின் ‘தலை’ குறிவைக்கப்பட்டதா? சுயாதீன விசாரணை கோருகிறது ஐதேக

  • October 2, 2026
  • 0 Comments

இலங்கை – இந்திய அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்தவேளை, அணிவகுப்பு மரியாதையின் போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்றதொரு சம்பவம்தான் ரணில் விக்ரமசிங்க நீதிமன்ற வளாகத்தில் இருந்தபோது நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஐதேக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, வஜிர அபேவர்தன ஆகியோர் இந்த […]

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உலக வங்கிக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. செய்தி

வடக்கு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து உலக வங்கி ஆராய்வு

  • October 2, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உலக வங்கிக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, வடக்கு மாகாணத்தில் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, குறித்த திட்டங்களின் ஒப்பந்தச் செயன்முறை, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசு – தனியார் கூட்டாண்மையை உள்ளடக்கிய வகையில் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மேலும், யாழ்ப்பாணக் கோட்டை அபிவிருத்தித் […]