வடக்கு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து உலக வங்கி ஆராய்வு
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், உலக வங்கிக் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, வடக்கு மாகாணத்தில் உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, குறித்த திட்டங்களின் ஒப்பந்தச் செயன்முறை, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசு – தனியார் கூட்டாண்மையை உள்ளடக்கிய வகையில் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், யாழ்ப்பாணக் கோட்டை அபிவிருத்தித் திட்டத்தில் அரசு – தனியார் கூட்டாண்மையை உள்வாங்குவது தொடர்பில் வர்த்தக சமூகத்தினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக உலக வங்கிக் குழுவினர் தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் தேவைகளுக்கு அமைவாக திட்டங்களை பயனுள்ள வகையில் முன்னெடுப்பதற்கும், அவற்றின் நடைமுறைப்படுத்தலில் தேவையான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் அவர்களும் பங்கேற்றார்.





