மன்னார் - யாழ்ப்பாணம் ஏ - 32 பிரதான வீதியின் பள்ளமடு பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற சிறிய ரக பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இலங்கை செய்தி

மன்னாரில் விபத்து: ஒருவர் பலி – நால்வர் காயம்

  • October 12, 2026
  • 0 Comments

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ – 32 பிரதான வீதியின் பள்ளமடு பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற சிறிய ரக பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக பஸ் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற வேளையில் பஸ்ஸில் பயணித்த 20 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த நான்கு […]

ஐரோப்பா

சவூதி அரேபியாவிற்கான பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா வலியுறுத்து

  • October 12, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவிற்கான பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா தனது குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது. மத்தியக்கிழக்கில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த தனது புதிய அறிவிப்பில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது. இதற்கமைய அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு,  காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO), ஜித்தா, தம்மாம் நகரங்களுக்கும், மதீனா சர்வதேச விமான நிலையத்தைத் தவிர சவூதி அரேபியாவில் உள்ள மற்ற அனைத்து விமான நிலையங்களுக்கும் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. அக்டோபர் 10 அன்று ரியாத்தில் உள்ள கிங் காலித் […]

தலைமை தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) விவகாரங்களுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றதை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியா செய்தி

இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி: மத்திய அமைச்சர் கடும் சீற்றம்

  • October 12, 2026
  • 0 Comments

தலைமை தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) விவகாரங்களுக்கு எதிராக ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றதை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்சித்துள்ளார். அரசியலமைப்பு அதிகாரிகளை மிகவும் அநாகரிகமான முறையில் அவமதிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் சாடியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். தேர்தல் […]

உலகம்

நைஜீரியாவில் வணிகர்களை குறிவைத்து தாக்குதல் – 20 பேர் படுகொலை

  • October 12, 2026
  • 0 Comments

நைஜீரியாவின் வடமேற்கு ஜம்ஃபாரா மாநிலத்தில், இராணுவப் பாதுகாப்புடன் சந்தைக்குச் சென்று கொண்டிருந்த வணிகர்களின் வாகனங்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மதியம் சுமார் 2 மணியளவில், குவாஷியிலிருந்து Gwashi புக்குயும் Bukkuyum  மாவட்டத்தில் உள்ள நசராவா Nasarawa  சந்தைக்கு வாகனங்கள் சென்றுக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 20 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்களில் நான்கு இராணுவ வீரர்கள், மூன்று காவலர்கள் மற்றும் ஒரு நைஜீரிய குடிமைப் பாதுகாப்புப் படை […]

உலகம்

நேபாள வெள்ளத்தில் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் மலையேறுபவர்கள்

  • October 12, 2026
  • 0 Comments

நேபாளத்தில் வார இறுதியில் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தால் மலையேற்றப் பாதைகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கும்  மேற்பட்ட வெளிநாட்டு மலையேற்றப் பயணிகள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காத்மாண்டுக்கு மேற்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள கோர்கா மாவட்டத்தில் அக்டோபர் 11 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு புதி கண்டகி (Budhi Gandaki) ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ள நீர் வடிந்த நிலையிலும் மீட்பு பணிகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால் அனைத்தையும் அழித்துவிடுவோம் – நேட்டோ தளபதி எச்சரிக்கை

  • October 12, 2026
  • 0 Comments

நேட்டோவின் பிரதேசத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் அளவுக்கு  “முட்டாள்தனமாக” நடந்துகொண்டால், அத்தகைய தாக்குதலில் சம்பந்தப்பட்ட “எல்லாவற்றையும்” தனது படைகள் அழித்துவிடும் என நேட்டோ தளபதி மொஸ்கோவிற்கு எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. வார்சாவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் தனது “வெற்றிக் கோட்பாட்டை” விவரித்த அமெரிக்க விமானப்படை ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் Alexus Grynkewich இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நேட்டோ ஒரு தற்காப்புக் கூட்டணி என்றாலும், அதன் உறுப்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும் அது […]

ஐரோப்பா

போப் லியோவிற்கு நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு

  • October 12, 2026
  • 0 Comments

தனது நுரையீரலில் ஒரு சிறிய கட்டி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வரும் நாட்களில் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக பரிசுத்த பாப்பரசர் போப் லியோ XIV, அறிவித்துள்ளார். ரோமில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற வழக்கமான ஞாயிறு பிரார்த்தனையின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 71 வயதான போப் லியோ XIV, தனது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதாகவும், இது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்ட ஒரு பாதிப்பு என்றும் குறிப்பட்டுள்ளார். […]

உலகம்

காசாவில் தாக்குதல்களை தொடரும் இஸ்ரேல் – ஒருவர் பலி

  • October 12, 2026
  • 0 Comments

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுதம் ஏந்திய ஒரு தீவிரவாதியை இலக்காகக் கொண்டே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக  இஸ்ரேல் கூறுகிறது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் மீண்டும் ஆயுதம் ஏந்தி தாக்குதல்களைத் தொடங்கத் தயாராகி வருவதாக இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்ற நிலையில், காசா பகுதியில் மோதல்கள் […]

இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி

  • October 12, 2026
  • 0 Comments

தற்போது வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக அக்டோபர் 9 அன்று தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.  பின்னர் மீண்டும் சிறைக்காவலுக்கு மாற்றப்பட்டிருந்தார். கண் தொடர்பான பாதிப்பு காரணமாக, அக்டோபர் 8 அன்று அவர் சிறைச்சாலை மருத்துவ நிபுணரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் யாருக்கும் தஞ்சம் வழங்க மாட்டோம் – Reform UK கட்சி அறிவிப்பு

  • October 12, 2026
  • 0 Comments

அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சி வெற்றி பெற்றால், ஐந்து ஆண்டுகள் வரை யாருக்கும் தஞ்சம் (asylum) வழங்கப்படாது என்று ‘ரீஃபார்ம் யுகே’ (Reform UK) கட்சியின் தலைவர் நைஜல் ஃபாராஜ் Nigel Farage அறிவித்துள்ளார். நிலுவையில் உள்ள சுமார் 90,000 தஞ்சம் கோரும் விண்ணப்பங்கள் செல்லாததாக்கப்படும் என்றும், புதிய விண்ணப்பங்கள் தானாகவே நிராகரிக்கப்படும் என்றும், தகுதி பெறாத விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கோ அல்லது பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்கோ திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் வாக்குறுதியளித்துள்ளார். இங்கிலாந்தின் தெற்குக் […]