ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் திருப்பம் – உக்ரைன் ஆதரவு பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு

ஐரோப்பிய நாடான லத்வியாவின் Latvia உக்ரைன் ஆதரவு மத்தியவாதக் கட்சியான United List , தேசியவாத தேசியக் கூட்டணியுடன் (National Alliance) இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க இணக்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான லத்வியாவின் Latvia உக்ரைன் ஆதரவு மத்தியவாதக் கட்சியான United List , தேசியவாத தேசியக் கூட்டணியுடன் (National Alliance) இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க இணக்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வரலாற்று வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்தக் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதன் பின்னர் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில், ஐக்கிய பட்டியல் கட்சி அதிகூடிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இத்தேர்தலில் 35.3 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்கு ஒன்று அல்லது இரண்டு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு அக்கட்சிக்குத் தேவையாக இருந்தது.

அனைத்துச் சாத்தியமான கூட்டணிக் கட்சிகளுடனும் கலந்துரையாடி, அவற்றின் நிலைப்பாடுகளை ஆராய்ந்த பின்னரே தேசியக் கூட்டணியுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்ததாக பிரதமர் அந்திரிஸ் குல்பெர்க்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நீண்டகால ஒத்துழைப்பும், இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்த அரசியல் நிலைப்பாடுகளும் இந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

லத்வியாவில் கடந்த மே மாதம் பிரதமராகப் பதவியேற்ற குல்பெர்க்ஸ், உக்ரைனின் இராணுவ ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) நாட்டுக்குள் கண்டறியப்படாமல் நுழைந்த சம்பவங்களைக் கையாள்வதில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, முந்தைய கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்ததையடுத்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

இதற்கிடையில், கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக பால்டிக் பிராந்தியத்தின் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் லத்வியாவின் பொருளாதார வளர்ச்சி பின்தங்கிய நிலையில் உள்ளது.

நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை மேம்படுத்துதல், தேவையற்ற நிர்வாக நடைமுறைகளைக் குறைத்தல் மற்றும் அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி