காசாவில் தாக்குதல்களை தொடரும் இஸ்ரேல் – ஒருவர் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயுதம் ஏந்திய ஒரு தீவிரவாதியை இலக்காகக் கொண்டே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஹமாஸ் மீண்டும் ஆயுதம் ஏந்தி தாக்குதல்களைத் தொடங்கத் தயாராகி வருவதாக இஸ்ரேல் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்ற நிலையில், காசா பகுதியில் மோதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




