உலகம்

நேபாள வெள்ளத்தில் ஆங்காங்கே சிக்கித் தவிக்கும் மலையேறுபவர்கள்

நேபாளத்தில் வார இறுதியில் ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தால் மலையேற்றப் பாதைகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கும்  மேற்பட்ட வெளிநாட்டு மலையேற்றப் பயணிகள் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காத்மாண்டுக்கு மேற்கே சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள கோர்கா மாவட்டத்தில் அக்டோபர் 11 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு புதி கண்டகி (Budhi Gandaki) ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ள நீர் வடிந்த நிலையிலும் மீட்பு பணிகள் தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்டபில் கருத்து வெளியிட்டுள்ள MACP) அதிகாரியான புவன் ராஜ் ஓஜா, மலையேற்றப் பாதையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதால், 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலையேற்றப் பயணிகள் திரும்ப முடியாமல் பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பதாகத் தெரிவித்தார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்