ஐரோப்பா

போப் லியோவிற்கு நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு

தனது நுரையீரலில் ஒரு சிறிய கட்டி கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, வரும் நாட்களில் தனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக பரிசுத்த பாப்பரசர் போப் லியோ XIV, அறிவித்துள்ளார்.

ரோமில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற வழக்கமான ஞாயிறு பிரார்த்தனையின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

71 வயதான போப் லியோ XIV, தனது மருத்துவக் குழுவின் ஆலோசனையின் பேரில் இந்த அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டதாகவும், இது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்ட ஒரு பாதிப்பு என்றும் குறிப்பட்டுள்ளார்.

இத்தாலியின் ரோமில் உள்ள ஜெமெல்லி  (Gemelli Hospital)  மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைய சுமார் ஒரு வாரம் ஆகும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

இதன் நிமித்தமாக உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்குத் திட்டமிடப்பட்டிருந்த பயணம் தடைப்படாது எனவும்  போப் உறுதிப்படுத்தியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்