ஷிரந்தி ராஜபக்ஷ கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி
தற்போது வெலிக்கடை சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய மருத்துவமனையின் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக சிறப்பு மருத்துவ சிகிச்சைக்காக அக்டோபர் 9 அன்று தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். பின்னர் மீண்டும் சிறைக்காவலுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
கண் தொடர்பான பாதிப்பு காரணமாக, அக்டோபர் 8 அன்று அவர் சிறைச்சாலை மருத்துவ நிபுணரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




