குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 364 முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது. அதே காலப்பகுதியில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 114 முறைப்பாடுகளும் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஏனைய பிரச்சினைகள் குறித்து மொத்தம் 9,613 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்குக் கிடைத்துள்ளன. இதில் அதிகபட்சமாக செப்டம்பர் மாதத்தில் 1,554 […]













