ஐரோப்பா

நேட்டோ மீது தாக்குதல் நடத்தினால் அனைத்தையும் அழித்துவிடுவோம் – நேட்டோ தளபதி எச்சரிக்கை

நேட்டோவின் பிரதேசத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் அளவுக்கு  “முட்டாள்தனமாக” நடந்துகொண்டால், அத்தகைய தாக்குதலில் சம்பந்தப்பட்ட “எல்லாவற்றையும்” தனது படைகள் அழித்துவிடும் என நேட்டோ தளபதி மொஸ்கோவிற்கு எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வார்சாவில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் தனது “வெற்றிக் கோட்பாட்டை” விவரித்த அமெரிக்க விமானப்படை ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச் Alexus Grynkewich இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நேட்டோ ஒரு தற்காப்புக் கூட்டணி என்றாலும், அதன் உறுப்பு நாடுகளுக்கு எதிரான எந்தவொரு தாக்குதலையும் அது தடுத்து நிறுத்தி   அந்தத் தாக்குதல் “முற்றிலும் பயனற்றது” என்பதை உறுதிசெய்யும் என்று கூறினார்.

ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நேரத்தில், அலெக்சஸ் கிரின்கேவிசின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

இதன்போது அவர் ரஷ்யாவின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும் அவருடைய கருத்துக்கள் ரஷ்யாவை நோக்கியே அமைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை தங்களுக்கு எதிராக நாசவேலைகள், ஆளில்லா விமான ஊடுருவல்கள் மற்றும் இணையவழித் தாக்குதல்கள் போன்ற நடவடிக்கைகளை மாஸ்கோ தீவிரப்படுத்துவதாக ஐரோப்பிய அரசாங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும், தனது தனித்த பகுதியான கலினின்கிராட்டை நேட்டோ துண்டிக்க முயன்றால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று ரஷ்யா கடந்த மாதம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்