இலங்கை செய்தி

மன்னாரில் விபத்து: ஒருவர் பலி – நால்வர் காயம்

மன்னார் - யாழ்ப்பாணம் ஏ - 32 பிரதான வீதியின் பள்ளமடு பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற சிறிய ரக பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ – 32 பிரதான வீதியின் பள்ளமடு பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற சிறிய ரக பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

முழங்காவில் பகுதியில் இருந்து தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களை ஏற்றி வந்த சிறிய ரக பஸ் ஒன்றே கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெற்ற வேளையில் பஸ்ஸில் பயணித்த 20 பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த நான்கு பேர் உடனடியாக மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை