இலங்கை

07 ஆம் வகுப்பு மாணவர் மீது தாக்குதல் – அதிபர் மீது முறைப்பாடு

  • October 18, 2026
  • 0 Comments

பண்டாரகம, வெல்மில்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கியதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாணவரின் தந்தை அளித்துள்ள முறைப்பாட்டின்படி, அதிபர் அந்த மாணவரின் முகத்தில் இரு கைகளாலும் பலமுறை அறைந்துள்ளார். இந்தத் தாக்குதலால் தனது மகனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான வலியின் காரணமாக அவனால் பல் துலக்கக்கூட […]

உலகம்

சவூதியில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

  • October 18, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் நஜ்ரான் பகுதியில் இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில்  ஹெலிகாப்டரில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துள்ளனர். குறித்த ஹெலிகாப்டர் உளவுப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை

நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ

  • October 18, 2026
  • 0 Comments

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னர் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஷ,   திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா

பாரிய கொள்ளை சம்பவத்தில் இருந்து மீண்டு வரும் லூவர் அருங்காட்சியகம்

  • October 18, 2026
  • 0 Comments

பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகம் பாதுகாப்பு குறைப்பாடுகளை படிப்படியாக சரிசெய்து வருகிறது. ஆனால் அதன் நற்பெயர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், அதன் பழுதடைந்த உள்கட்டமைப்பு பெருகிவரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகங்களில் ஒன்றான, இந்த அருங்காட்சியகம் பாரிய கொள்ளை சம்பவத்திற்கு பின் பாதுகாப்பு பிரச்சினைகளை வெளிச்சம்போட்டு காட்டியது. பழைய அல்லது இல்லாத சிசிடிவி கேமராக்கள், உபகரணங்களின் தொடர்ச்சியான பற்றாக்குறை, நவீன பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஒரு பாதுகாப்பு இயக்குநர் இல்லாதது என தொடர்ச்சியான தோல்விகளை […]

“நீதிமன்ற கட்டமைப்பு ஊடாக வழங்கப்படும் தீர்ப்பே நீதி தொடர்பில் சரியான முடிவு என நாம் நம்புகின்றோம். உயர்நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது, அந்த முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம். அதற்கு அப்பால் எம்மிடம் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்தார். இலங்கை செய்தி

உயர் நீதிமன்ற தீர்ப்பே இறுதி முடிவு: ஜனாதிபதி திட்டவட்டம்

  • October 18, 2026
  • 0 Comments

“நீதிமன்ற கட்டமைப்பு ஊடாக வழங்கப்படும் தீர்ப்பே நீதி தொடர்பில் சரியான முடிவு என நாம் நம்புகின்றோம். உயர்நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது, அந்த முடிவுக்கு நாம் கட்டுப்படுவோம். அதற்கு அப்பால் எம்மிடம் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாடு பதுளையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்ற நிலையே […]

செய்தி

ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடியில் சிக்கி இரு கப்பல்கள் சேதம்

  • October 18, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள், கடல் கண்ணிவெடிகள் தாக்கியதில் தீப்பிடித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. முதல் கப்பல் கண்ணிவெடியில் மோதுண்டு தீப்பிடித்ததாக அறிவிக்கப்பட்ட சிலமணிநேரங்களுக்கு பிறகு இரண்டாவது கப்பலும் வெடித்து தீப்பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட கப்பல்களின் பெயர்களோ அல்லது அவை கொண்டு சென்ற கச்சா எண்ணெய் தொடர்பிலோ எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. மேலும், இரண்டு கப்பல்களின் இருப்பிடக் கண்டறிதல் கருவிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாகவும், ஈரானால் அங்கீகரிக்கப்படாத […]

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள், தலைநகர் ரியாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வான்பரப்பில் நான்கு ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக அறிவித்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹூதிகளின் தாக்குதல் தீவிரம்: 4 ஆளில்லா விமானங்கள் இடைமறித்து அழிப்பு

  • October 18, 2026
  • 0 Comments

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள், தலைநகர் ரியாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வான்பரப்பில் நான்கு ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக அறிவித்துள்ளன. சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரியாத், கிழக்கு மாகாணம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் நான்கு ஆளில்லா விமானங்கள் இடைமறித்து […]

உலகம்

கனடாவில் இராணுவ தளம் ஒன்றில் தீவிபத்து – உயிரிழப்புகள் பதிவானதாக அறிவிப்பு

  • October 18, 2026
  • 0 Comments

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள மிக முக்கியமான ராணுவத் தளங்களில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் அது தொடர்பான தீவிர சம்பவத்தில் சிலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்‌கின்டி  தெரிவித்தார். ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய மெக்‌கின்டி, “கனடிய ராணுவத் தளமான ‘வெய்ன்ரைட்’ (Wainwright) தளத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறினார். இருப்பினும் இந்த “துயரமான” சம்பவத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் அல்லது காயமடைந்தனர் […]

ரஷ்ய ஏற்றுமதிகள் தொடர்பான தடைகள் மற்றும் வரிவிதிப்புகளைத் தளர்த்திய மறுநாளே, இது தொடர்பில் இறுதி முடிவு எதனையும் தாம் இன்னும் அறிவிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பா செய்தி பொழுதுபோக்கு முக்கிய செய்திகள்

ரஷ்யாமீதான தடைகள் தளர்வு: 60 நாட்கள் பிறகே இறுதி முடிவு

  • October 18, 2026
  • 0 Comments

ரஷ்ய ஏற்றுமதிகள் தொடர்பான தடைகள் மற்றும் வரிவிதிப்புகளைத் தளர்த்திய மறுநாளே, இது தொடர்பில் இறுதி முடிவு எதனையும் தாம் இன்னும் அறிவிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நிலைமையை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் கூடுதல் கால அவகாசம் கோருவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை தளர்த்தப்பட்ட ரஷ்யா தொடர்பான தடைகள் மற்றும் வரிவிதிப்புகளின் பொருளாதாரத் தாக்கங்களை மதிப்பிடுவதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் 60 நாட்கள் வரை எடுத்துக்கொள்வார் என ரூபியோ சனிக்கிழமை தெரிவித்துள்ளார். […]

கொல்கத்தாவின் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா செய்தி

கொல்கத்தாவை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்: பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

  • October 18, 2026
  • 0 Comments

கொல்கத்தாவின் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவின் சோர்பகன் துர்கா பூஜை பந்தலில் நேற்று பலத்த மழை காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலத்த மழையின் போது மக்கள் கூட்டம் திடீரென முண்டியடித்த காரணத்தால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த கொல்கத்தா காவல்துறையினர், அந்த பகுதியின் […]