பாரிய கொள்ளை சம்பவத்தில் இருந்து மீண்டு வரும் லூவர் அருங்காட்சியகம்
பிரான்ஸின் லூவர் அருங்காட்சியகம் பாதுகாப்பு குறைப்பாடுகளை படிப்படியாக சரிசெய்து வருகிறது.
ஆனால் அதன் நற்பெயர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், அதன் பழுதடைந்த உள்கட்டமைப்பு பெருகிவரும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் அருங்காட்சியகங்களில் ஒன்றான, இந்த அருங்காட்சியகம் பாரிய கொள்ளை சம்பவத்திற்கு பின் பாதுகாப்பு பிரச்சினைகளை வெளிச்சம்போட்டு காட்டியது.
பழைய அல்லது இல்லாத சிசிடிவி கேமராக்கள், உபகரணங்களின் தொடர்ச்சியான பற்றாக்குறை, நவீன பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஒரு பாதுகாப்பு இயக்குநர் இல்லாதது என தொடர்ச்சியான தோல்விகளை இந்தக் கொள்ளை அம்பலப்படுத்தியது.
“அந்தக் கொள்ளைச் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை” என்று CFDT தொழிற்சங்கத்தின் பணியாளர் பிரதிநிதியான வலேரி போட், தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு முன்னதாக, பாதுகாப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 83 மில்லியன் யூரோக்களில்,வெறும் 3 மில்லியன் யூரோக்களை மட்டுமே அந்த நிறுவனம் செலவிட்டிருந்தது நாடாளுமன்றத்தின் ஊடாக தெரியவந்தது.
அதேநேரம் இந்த அறிக்கை மற்றும் பிற காரணிகளுடன், பணியாளர்களின் வேலைநிறுத்தம், தண்ணீர் கசிவு மற்றும் டிக்கெட் மோசடி தொடர்பான பெரும் ஊழல் போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள், லூவ்ர் அருங்காட்சியகத்தின் தலைவர் லாரன்ஸ் டெஸ் கார்ஸின் பதவி விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




