இந்தியத் தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சிஜேபி அமைப்பினரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியா செய்தி

டெல்லியில் போராட்டங்களால் ரூ.3,000 கோடி வர்த்தக இழப்பு

  • October 19, 2026
  • 0 Comments

இந்தியத் தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சிஜேபி அமைப்பினரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், போராட்டங்கள் மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக, இம்மாதத்தில் இதுவரை டெல்லி வர்த்தகர்களுக்கு சுமார் 3,000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற போராட்டங்களால் சுமார் 2,000 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாகவும், ஒக்டோபர் 13ஆம் திகதி முதல் 16ஆம் […]

நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மின் அமைப்பு இயக்குநகம் அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

இருளில் மூழ்கடித்த மின்வெட்டு குறித்து விசாரணை ஆரம்பம்

  • October 19, 2026
  • 0 Comments

நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மின் அமைப்பு இயக்குநகம் அறிவித்துள்ளது. சனிக்கிழமை ஒரு மின்பிறப்பாக்கி செயலிழந்ததால், நாடு தழுவிய மின்வெட்டு ஏற்பட்டதாகவும், இது 30 வினாடிகளுக்குள் நாட்டின் தேசிய மின் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்தது. காலை சுமார் 11:43 மணியளவில் இந்த மின்வெட்டு ஏற்பட்டது. அசாதாரண சூழ்நிலைகளில் ஒரு மின்பிறப்பாக்கி தானியங்கித் துண்டிப்பு, பொதுவாக ஒரு முழுமையான மின் அமைப்புச் செயலிழப்பை ஏற்படுத்தக் கூடாது. மின்வெட்டு ஏற்பட்ட சிறிது […]

“சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி இனவாத கருத்தியலை விதைக்க முற்படுகின்றது. தமிழ் தலைவரான மனோ கணேசன் இனியும் இதற்கு துணை நிற்காமல் உடன் பதவி விலக வேண்டும்.”- என்று தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் வலியுறுத்தினார். இலங்கை செய்தி

இனவாதம் பரப்பும் சஜித் அணி: ஆளுங்கட்சி குற்றச்சாட்டு

  • October 19, 2026
  • 0 Comments

“சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி இனவாத கருத்தியலை விதைக்க முற்படுகின்றது. தமிழ் தலைவரான மனோ கணேசன் இனியும் இதற்கு துணை நிற்காமல் உடன் பதவி விலக வேண்டும்.”- என்று தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் வலியுறுத்தினார். பதுளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தை முன்னிலைப்படுத்துகின்றது. இதனால் பெரும்பான்மை […]

சீன வங்கியின் (Bank of China) கொழும்பு கிளை, இலங்கையில் முதல் ரென்மின்பி (RMB) தீர்வு வங்கியாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது. இலங்கை செய்தி

சீன வங்கியின் கொழும்பு கிளை திறப்பு

  • October 19, 2026
  • 0 Comments

சீன வங்கியின் (Bank of China) கொழும்பு கிளை, இலங்கையில் முதல் ரென்மின்பி (RMB) தீர்வு வங்கியாகச் செயற்பட ஆரம்பித்துள்ளது. இதன் மூலம், சீனாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அமெரிக்க டொலர் வழியாக அல்லாமல், நேரடியாக சீன நாணயமான ரென்மின்பி மூலம் தீர்வு செய்ய அனுமதிக்கும் தனது செயற்பாடுகள் முறைப்படி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீனாவின் மத்திய வங்கியான சீன மக்கள் வங்கி , கொழும்பிலுள்ள சீன வங்கியின் கிளையை ஒரு தீர்வு வங்கியாக அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கை, இலங்கையில் […]

“தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்பும்போது அதனை குழப்புவதற்கும், மீண்டும் தலைதூக்குவதற்கும் பழைய இனவாத கும்பல் முற்படுகின்றது. ஆனால் இந்த இனவாத கும்பலுக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். அந்த இனவாத கும்பலின் சூழ்ச்சிகளை மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கை செய்தி

இலங்கையில் மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளியோம்

  • October 19, 2026
  • 0 Comments

“தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்பும்போது அதனை குழப்புவதற்கும், மீண்டும் தலைதூக்குவதற்கும் பழைய இனவாத கும்பல் முற்படுகின்றது. ஆனால் இந்த இனவாத கும்பலுக்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். அந்த இனவாத கும்பலின் சூழ்ச்சிகளை மக்கள் நிச்சயம் தோற்கடிப்பார்கள்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட மகளிர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு , “எமது நாட்டில் 30 வருடங்கள் போர் இடம்பெற்றது. வடக்கிலும், தெற்கிலும் […]

உலகம்

இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகுவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு – ட்ரம்ப் அறிவிப்பு

  • October 18, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தனது கூட்டாளியான பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது ட்ரூத் (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலுக்குள்ளிருந்தே எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், மிகவும் வலிமையாகவும், துணிச்சலாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்தகைய கூட்டாளியையே அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படப் போட்டியிடும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, எனது முழுமையான மற்றும் நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதாகவும் […]

ஐரோப்பா

ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே விமான நிலையத்தில் மற்றுமொரு பாதுகாப்பு மீறல் சம்பவம்

  • October 18, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் லைப்சிக்/ஹாலே விமான நிலையத்தில் மற்றுமொரு பாதுகாப்பு மீறல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஒன்று விமான நிலையத்தின் வேலியை உடைத்துக்கொண்டு உள்ளே அத்துமீறி பிரவேசித்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம், விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் ஒன்று இனங்காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இடம்பெற்ற இராண்டாவது பாதுகாப்பு மீறலாக இது காணப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அல்லது அங்கீகரிக்கப்படாத நபர்களைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், ஆனால் மேலதிக சோதனைகளை மேற்கொள்வதாகவும் லைப்சிக் […]

ஐரோப்பா

பிரான்ஸில் அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

  • October 18, 2026
  • 0 Comments

பிரான்ஸில் வாழ்க்கை செலவு நெருக்கடியை கண்டித்து அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டங்கள் தற்போது வன்முறையாக மாறியுள்ளன. 500000 மக்கள் வீதிகளில் இறங்கி 110 இடங்களில் போரட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மக்கள் அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்த வேளையில், கருப்பு உடை அணிந்த சிலர் சொகுசு அங்காடிகளின் ஜன்னல்களை உடைத்தும், கடைகளைச் சூறையாடியும், பட்டாசுகளை வீசியும், குப்பைத் தொட்டிகள் மற்றும்பிர மிதிவண்டிகளுக்குத் தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதில் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருவர் கைது

  • October 18, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்பெயினின் வடமேற்குப் பகுதியான பாஸ்க் Basque  பகுதியில் இன்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 34 வயதுடைய ஆண் மற்றும் 22 வயதுடைய பெண் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அவர்களிடம் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களுள், பாதுகாப்புப் படைகள் குறித்த தகவல்களும், ஆயுதங்கள் […]

உலகம்

ஈரானின் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி கெதாப்சி நியமனம்

  • October 18, 2026
  • 0 Comments

ஈரானில் புதிய பாதுகாப்பு அமைச்சராக மெஹர்தாத் அக்லாகி கெதாப்சி Mehrdad Akhlaqi Ketabchi நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அமைச்சகத்தில் பல மாதங்களாக நிலவி வந்த இடைக்காலத் தலைமை முடிவுக்கு வந்ததுள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே கடந்த பிப்ரவரியில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பிறகு, இடைக்காலப் பொறுப்பில் இருந்த மஜித் இப்னு அல்-ரெசா நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.