நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள நவாலொக்க மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னர் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட ஷிராந்தி ராஜபக்ஷ, திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




