ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடியில் சிக்கி இரு கப்பல்கள் சேதம்
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்கள், கடல் கண்ணிவெடிகள் தாக்கியதில் தீப்பிடித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
முதல் கப்பல் கண்ணிவெடியில் மோதுண்டு தீப்பிடித்ததாக அறிவிக்கப்பட்ட சிலமணிநேரங்களுக்கு பிறகு இரண்டாவது கப்பலும் வெடித்து தீப்பிடித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சம்பந்தப்பட்ட கப்பல்களின் பெயர்களோ அல்லது அவை கொண்டு சென்ற கச்சா எண்ணெய் தொடர்பிலோ எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
மேலும், இரண்டு கப்பல்களின் இருப்பிடக் கண்டறிதல் கருவிகளும் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாகவும், ஈரானால் அங்கீகரிக்கப்படாத ஒரு பாதையில் அவை பயணிக்க முயன்றதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




