ஐரோப்பா செய்தி பொழுதுபோக்கு முக்கிய செய்திகள்

ரஷ்யாமீதான தடைகள் தளர்வு: 60 நாட்கள் பிறகே இறுதி முடிவு

ரஷ்ய ஏற்றுமதிகள் தொடர்பான தடைகள் மற்றும் வரிவிதிப்புகளைத் தளர்த்திய மறுநாளே, இது தொடர்பில் இறுதி முடிவு எதனையும் தாம் இன்னும் அறிவிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஏற்றுமதிகள் தொடர்பான தடைகள் மற்றும் வரிவிதிப்புகளைத் தளர்த்திய மறுநாளே, இது தொடர்பில் இறுதி முடிவு எதனையும் தாம் இன்னும் அறிவிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நிலைமையை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் கூடுதல் கால அவகாசம் கோருவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை தளர்த்தப்பட்ட ரஷ்யா தொடர்பான தடைகள் மற்றும் வரிவிதிப்புகளின் பொருளாதாரத் தாக்கங்களை மதிப்பிடுவதற்கு ஜனாதிபதி ட்ரம்ப் 60 நாட்கள் வரை எடுத்துக்கொள்வார் என ரூபியோ சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், பாம் பீச்சில் உள்ள தனது மார்-அ-லாகோ (Mar-a-Lago) வளாகத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ட்ரம்ப், “எனது முடிவு என்னவென்பது உங்களில் பலருக்குத் தற்போது தெரியாது. ஆனால், நாம் அதனைத் தீர்மானிப்போம்; அது என்னவென்பதை நீங்களும் அறிந்துகொள்வீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இந்தத் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுடனான போர் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தைப் பாதித்துள்ளதால், எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் ட்ரம்ப் அரசாங்கம் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது.

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சட்டமன்ற உறுப்பினர்களின் வலியுறுத்தலுக்கு அமைய கடந்த மாதம் ட்ரம்ப் கையெழுத்திட்ட கிரஹாம் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டிருந்த முக்கிய தடைகள் மற்றும் வரிவிதிப்புகளைத் தளர்த்தும் நிர்வாக உத்தரவில் அவர் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.

ரஷ்யப் பொருட்கள் மீதான வரிவிதிப்புகள் மற்றும் ரஷ்ய எண்ணெய், எரிவாயுவைக் கொள்வனவு செய்யும் நாடுகள் மீதான அபராதங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரவிருந்தன.

எனினும், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிர்வாக உத்தரவில் இந்தத் தளர்வு எவ்வளவு காலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், 60 நாட்கள் காலப்பகுதியில் நிலைமையை மீளாய்வு செய்ய ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக ரூபியோ தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி