இங்கிலாந்தில் மீண்டும் ஒருமுறை உயரும் வட்டி விகிதம்?
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மீண்டும் ஒருமுறை வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும் என இங்கிலாந்து வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹியூ பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த வாரம் வட்டி விகிதங்களை 4 சதவீதமாக உயர்த்தியதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்திலும் கால் சதவீத (0.25%) உயர்வைக் கொண்டுவருவதை ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு மத்திய வங்கியின் வட்டி விகிதம் சுமார் 5 சதவீதத்தை எட்டக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ள நிலையில் ஹியூ பில்லின் கருத்துக்கள் வந்துள்ளன.
தற்போது 3.5 சதவீதமாக உள்ள பணவீக்கம், எரிசக்தி செலவுகளின் உயர்வு மற்றும் புவிசார் அரசியல் மோதல்கள் காரணமாக, அடுத்த வசந்த காலத்தில் 5 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




