07 ஆம் வகுப்பு மாணவர் மீது தாக்குதல் – அதிபர் மீது முறைப்பாடு
பண்டாரகம, வெல்மில்ல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கியதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவரின் தந்தை அளித்துள்ள முறைப்பாட்டின்படி, அதிபர் அந்த மாணவரின் முகத்தில் இரு கைகளாலும் பலமுறை அறைந்துள்ளார்.
இந்தத் தாக்குதலால் தனது மகனின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடுமையான வலியின் காரணமாக அவனால் பல் துலக்கக்கூட முடியவில்லை என்றும் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த மாணவர் முதலில் சிகிச்சைக்காக வெதர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து மாணவரின் தந்தை பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.




