உலகம்

மியாமி விமான நிலையில் இரு விமானங்கள் மோதி விபத்து

மியாமி சர்வதேச விமான நிலையத்தில், சரக்கு விமானம் ஒன்றும் பயணிகள் விமானம் ஒன்றும் மோதி நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளன.

கோபா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் யுபிஎஸ்  போயிங் 767 சரக்கு விமானமும் தொடர்பு பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோபா விமானத்தின் இறக்கை நுனி யுபிஎஸ் போயிங் 767 விமானத்தின் மூக்குப் பகுதியை உரசியதாக கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் இருவர் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு தேவையான முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து விமானக் கட்டுப்பாட்டாளர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்