உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹூதிகளின் தாக்குதல் தீவிரம்: 4 ஆளில்லா விமானங்கள் இடைமறித்து அழிப்பு

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள், தலைநகர் ரியாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வான்பரப்பில் நான்கு ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக அறிவித்துள்ளன.

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டு வரும் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள், தலைநகர் ரியாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் வான்பரப்பில் நான்கு ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்துள்ளதாக அறிவித்துள்ளன.

சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகளை இலக்குவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரியாத், கிழக்கு மாகாணம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் நான்கு ஆளில்லா விமானங்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகக் கூட்டுப் படைகளின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல் மாலிக்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், ஹூதிகளுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை விமானப்படையினர் இடைமறிப்பதையும், பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் காண்பிக்கும் காணொளிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ரியாத் விமான நிலையம் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள்
சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது இதுவரை குறைந்தது 20 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி ஆதரவு பெற்ற யேமன் அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதல்கள் ஜூலை மாதம் மீண்டும் தீவிரமடைந்ததிலிருந்து இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி