ஐரோப்பிய நாடுகளில் அச்சத்தை விதைக்க புடின் சதித்திட்டம் – ஜெர்மனி எச்சரிக்கை
உக்ரைன்-போலந்து எல்லைக்கு அருகே ரயில் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், ஐரோப்பாவில் அச்சத்தை விதைப்பதற்காக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் திட்டமிட்டு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையாகும் என்று ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “நாம் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், ஆத்திரமூட்டல்களுக்கு ஆளாகாமல் இருப்பதும் மிக முக்கியம் என்றார்.
அதே வேளையில், நம்மைத் தற்காத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பதையும், நிலைமை தீவிரமடைந்தால் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்பதையும் எவ்வித ஐயமுமின்றி வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நேட்டோ (NATO) உறுப்பு நாடான போலந்து எல்லையில் ரயில் ஒன்றின் எஞ்சின் மீது நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த ரயிலில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், மற்றும் ஐரோப்பிய இராஜதந்திரிகள் பயணித்திருந்தனர்.
இந்நிலையில் ரஷ்யா நடத்திய இந்த தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.




