ஐரோப்பா

அணுசக்தி விரிவாக்க முயற்சியில் பிரான்ஸுடன் கூட்டிணையும் பின்லாந்து

அணுசக்தித் தடுப்புத் திறனின் (nuclear deterrent) வரம்பை விரிவுபடுத்தும் முயற்சியில் பிரான்ஸுடன் பின்லாந்தும் கூட்டிணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பாவிற்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதிப்பாடு மற்றும் உக்ரைன் போரினால் ஏற்படும் பாதுகாப்பு விளைவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்ததை தொடர்ந்து அணுசக்தித் தடுப்பு முயற்சி’ (Forward Nuclear Deterrence Initiative) குறித்த அறிவிப்பை பிரான்ஸ் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது பிரான்ஸ் அரசுடன் பின்லாந்தும் கூட்டிணைந்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பின்லாந்து ஜனாதிபதி, “இந்த முயற்சி முதன்மையாக ஐரோப்பியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தனது பாதுகாப்பிற்கான ஐரோப்பாவின் பொறுப்பை உறுதிப்படுத்துவதுடன், மோதல் தீவிரமடைவதைத் தடுக்கவும் உதவுகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்