குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை – புதிய முன்மொழிவை சமர்ப்பித்தது பிரான்ஸ்
குழந்தைகளுக்கான சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்வதற்கான முந்தைய சட்டமுயற்சி நாட்டின் உயரிய அரசியலமைப்பு அமைப்பால் நிராகரிக்கப்பட்ட நிலையில், திருத்தப்பட்ட புதிய முன்மொழிவை பிரெஞ்சு அரசாங்கம் சமர்ப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அதிபர் இம்மானுவேல் மகரோன் இன்று இதனை அறிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாட்டை விதிப்பதாகக் கூறி, பிரான்ஸின் அரசியலமைப்பு மன்றம் (Constitutional Council) முந்தைய சட்ட முன்மொழிவை நிராகரித்தது.
இந்நிலையிலேயே தற்போது புதிய சட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மக்ரோன், “தீவிரமான தொழில்நுட்பப் பணிகளுக்குப் பிறகு, இந்த புதிய வரைவு குறித்து ஐரோப்பிய ஆணையத்திற்கு அரசாங்கம் இன்று அறிவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு இணங்க இருப்பதை உறுதி செய்வதால், இந்த அறிவிப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.




