ஜோர்டானில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட விபத்து – 11 பேர் காயம்
ஜோர்டானின் அகபாவில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் அமோனியா கசிவால் 11 பேர் காயமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக தெரியவருகிறது.
வாயு கசிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த மக்களை வெளியேற்றியுள்ளனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பேட்டையில், பழைய பம்ப் அல்லது அழுத்தக் கருவி ஒன்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது வாயு வெளியேறியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




