ஐரோப்பா

பிரித்தானியாவில் தீவிரமடைந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் – ஐவர் கைது

  • August 7, 2026
  • 0 Comments

கிழக்கு ஆங்கிலியாவில் உள்ள நார்ஃபோக் (Norfolk) கவுண்டியில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் 05 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தெட்ஃபோர்டுக்கு(Thetford) சற்று வெளியே அமைந்துள்ள முன்னாள் இராணுவ விமானத் தளமான RAF பார்ன்ஹாமை (RAF Barnham),  இங்கிலாந்தில் தஞ்சம் கோருவோருக்கான தங்குமிடமாக மாற்ற அரசாங்கம்  முன்மொழிந்துள்ளது. 18 முதல் 65 வயதுக்குட்பட்ட திருமணமாகாத வயதுவந்த ஆண்களுக்கு இந்த இடம் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்ததின் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே […]

சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை செய்தி

சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை

  • August 7, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நாட்டின் 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்புத் தொடர்பாக மேலதிகமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், கைதிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும், அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்தும் […]

உலகம்

கடும் வெப்ப அலையுடன் போராடும் வடகொரியா – பாராம்பரிய உணவு முறையை பின்பற்ற அறிவுறுத்தல்

  • August 7, 2026
  • 0 Comments

வடகொரியா வரலாறு காணாத வெப்ப அலையுடன் போராடி வருகிறது. அந்நாட்டில் தற்போது 36.7 டிகிரி செல்சியஸ் (98.1 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடும் வெப்பத்தைச் சமாளிக்க, வட கொரிய அரசு ஊடகங்கள் பாராம்பரியமான உணவு முறைகளை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றன. உதாரணமாக, நாய்க்கறி சூப்,   தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சி தரும் உணவுகள் உட்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளன. அதேநேரம் அந்நாட்டின் அரச ஊடகங்கள், கிம் ஜாங் உன்னை, தனது மக்களுடன் சேர்ந்து கடுமையான சூழ்நிலைகளைத் தாங்கிக்கொள்ளும் […]

மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மெக்காவில் வெள்ளிக்கிழமை (07) கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகம் செய்தி

வளைகுடாவில் திருப்பம்: 3 முஸ்லிம் நாடுகள் கைகோர்ப்பு

  • August 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் தீவிரமான போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில், துருக்கி, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மெக்காவில் வெள்ளிக்கிழமை (07) கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளின் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களால் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தங்கள் பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் இம்மூன்று நாடுகளும் இந்த முடிவை […]

ஐரோப்பா

ரஷ்யாவின் புதிய திட்டம் – நேட்டோ நாட்டின் மீது குறி

  • August 7, 2026
  • 0 Comments

நேட்டோ உறுப்பு நாடு ஒன்றின் மீது ரஷ்யா சிறிய அளவிலான தாக்குதலை நடத்தி அவ் அமைப்பின்  வலிமையை சோதிக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் மேற்கோள் காட்டப்பட்ட அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, இணையவழித் தாக்குதல்கள், நாசவேலை அல்லது ஒரு சிறிய அளவிலான தரைவழி ஊடுருவல் ஆகியவை இடம்பெறலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக ருமேனியா, போலந்து உள்ளிட்ட நாடுகள் மீது ரஷ்யாவின் ட்ரோன்கள் ஊடுருவியதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் […]

மொனராகலை மாவட்ட மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் சேனாநாயக்க சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் கள ஆய்வில் ஈடுபட்டு, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இலங்கை செய்தி

சேனாநாயக்க சமுத்திரத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது குறித்து ஆராய்வு

  • August 7, 2026
  • 0 Comments

மொனராகலை மாவட்ட மீனவர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வரும் சேனாநாயக்க சமுத்திரப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் கள ஆய்வில் ஈடுபட்டு, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்தக் கலந்துரையாடலில் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA), தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களும் […]

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கைச் சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்

  • August 7, 2026
  • 0 Comments

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, படகும் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள அவர், இயந்திரக் கோளாறு காரணமாகப் படகு நெடுந்தீவு அருகே தரைதட்டிய நிலையிலேயே கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகச் […]

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை செய்தி

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாதுகாப்பு தீவிரம்

  • August 7, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சூழலில் தீவிர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகச் சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார். இதனிடையே, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்து ஆராய்ந்தார். நாட்டின் பல்வேறு […]

“நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். இலங்கை செய்தி

மக்கள் ஆணையை மீறாதீர்: அமைச்சர்களுக்கு பேராயர் ஆலோசனை

  • August 7, 2026
  • 0 Comments

“நீதித்துறைக்கும், நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பேராயர் ஆண்டகை எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாம் ஒருபோதும் மக்கள் ஆணைக்குப் புறம்பாகச் செயற்படமாட்டோம்” என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பான அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து, கொழும்பு மறைமாவட்டப் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு நேற்று (06) தெளிவுபடுத்தப்பட்டது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ […]

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை செய்தி

சிறைச்சாலைகளில் நடந்தது என்ன? அரசு விளக்கம்

  • August 7, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பள்ளன்சேன சிறைச்சாலையிலும் நிலைமை சீரடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில்: ” நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து மஹர சிறைச்சாலையிலும் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டது. இன்று காலை […]