இலங்கை செய்தி

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாதுகாப்பு தீவிரம்

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சூழலில் தீவிர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகச் சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.

இதனிடையே, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்து ஆராய்ந்தார்.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையிலேயே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று (07) இவ்வாறு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

நீர்கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் தற்போது 42 பேர் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 980 கைதிகள் சிறையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ள சிறைச்சாலை அத்தியட்சகர் மோகன், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை