ஐரோப்பா

எல்லை கட்டுப்பாடுகள் தொடர்பில் இத்தாலிக்கு இறுதி எச்சரிக்கை – ஸ்பெயின் அறிவிப்பு

  • August 7, 2026
  • 0 Comments

ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகள் மீது விதிக்கப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன் நீக்க வேண்டும் என்று  இத்தாலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசாங்கம் இன்று இந்த எச்சரிக்கையை விடுத்தது. இந்த நடவடிக்கை “அநியாயமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களுக்கு எதிரானது மற்றும் ஸ்பானிய மக்களுக்கு எதிரான பாகுபாடு கொண்டது” என்று ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஸ்பானிய குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க “சமமான நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்செஸின் (Pedro Sánchez) […]

ஐரோப்பா

போதைப்பழக்கங்களைத் தடுப்பது தொடர்பில் விசேட மாநாட்டிற்கு ஏற்பாடு

  • August 7, 2026
  • 0 Comments

இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni) மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) ஆகியோர், போதைப்பழக்கங்களைத் தடுத்தல் மற்றும் அதிலிருந்து மீள்வது தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றை அறிவித்துள்ளனர். இது தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் 35 நாடுகள் இணைந்துள்ளன.  இந்த உச்சிமாநாடு, 2026 அக்டோபர் 23 அன்று நடைபெறவுள்ளது. இளைஞர்கள் மீது கவனம் செலுத்தி, போதைப்பழக்கத்தைத் தடுத்தல், சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைதல் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் […]

உலகம்

போர் அச்சுறுத்தல் – தைவானில் வான்வழித் தாக்குதல் ஒத்திகை

  • August 7, 2026
  • 0 Comments

தைவான் இன்றைய தினம் வான்வழித் தாக்குதல் ஒத்திகையை நடத்தியுள்ளது. பொதுமக்களின் அவசரகால நடவடிக்கைகளைச் சோதிக்கும் விதமாக, இந்த ஒத்திகை நடத்தப்பட்டதாகவும், இதன்போது போக்குவரத்து நிறுத்தப்பட்டு  குடியிருப்பாளர்கள் வழிநடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான், காவோசியுங்கில் (Kaohsiung) அபாய ஒலி எழுப்பட்டு நடத்தப்பட்ட இந்த ஒத்திகை சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஒத்திகையை தொடர்ந்து அவசரக்கால சூழ்நிலையில் பொதுமக்கள் நடந்துக்கொள்ள வேண்டிய விதம் தொடர்பில் அறிவுறுத்தல் வழக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், தைவான் பாதுகாப்பு […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் குழாய் நீரை பயன்படுத்த கட்டுப்பாடு

  • August 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் குழாய் நீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடானது  நாளை (08.08)  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய டெவோன் (Devon) , கார்ன்வால் (Cornwall), டோர்செட் (Dorset) மற்றும் சோமர்செட்டின் (Somerset)  சில பகுதிகள் மற்றும் ஸில்லி தீவுகள் ( Isles of Scilly) முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும். நீண்டகால வறண்ட வானிலை, சராசரியை விட கணிசமாகக் குறைவான மழைப்பொழிவு மற்றும் அதிக தேவை […]

உலகம்

தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க பெரு, மெக்சிகோ இணக்கம்

  • August 7, 2026
  • 0 Comments

பெருவும் மெக்சிகோவும் தூதரக உறவுகளை மீண்டும் புதுப்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இருநாடுகளும் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லிமாவில் உள்ள மெக்சிகோ தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த முன்னாள் பிரதமர் பெட்ஸி சாவேஸ் (Betssy Chavez), மெக்சிகோவிற்குப் பயணம் செய்ய லிமா அரசாங்கம் பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சாவேஸுக்கு மெக்சிகோ அரசாங்கம் தஞ்சம் வழங்கியதைத் தொடர்ந்து, பெருவுடனான தூதரக உறவுகள் சீர்குலைந்திருந்த நிலையில், தற்போது உறவுகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

மத்தியதரைக் கடலில் இயங்கிய ஆட்கடத்தல் வலையமைப்பை முறியடித்த ஸ்பெயின்

  • August 7, 2026
  • 0 Comments

மத்தியதரைக் கடலில் இயங்கி வந்த மிகப்பெரிய ஆட்கடத்தல் வலையமைப்புகளில் ஒன்றை முறியடித்துள்ளதாக ஸ்பெயின் பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர். இந்த வலையமைப்பு 2,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை நாட்டிற்குள் கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பில் ஸ்பெயினின் குடிமைப் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்தியதரைக் கடலில் இதுவரை கண்டறியப்பட்ட மிகவும் சிக்கலான, தீவிரமான மற்றும் ஆபத்தான பன்னாட்டு குற்ற வலையமைப்புகளில் ஒன்றை, குடிமைப் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய காவல்துறை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. MDMA போன்ற போதைப்பொருட்களுக்கான […]

பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவிற்கு பாதுகாப்பைத் தராது என்று ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி எச்சரித்துள்ளார். செய்தி

துருக்கி, பாகிஸ்தானுடன் சவுதி ஒப்பந்தம்: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

  • August 7, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவுதி அரேபியாவிற்கு பாதுகாப்பைத் தராது என்று ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ரெஸாயி எச்சரித்துள்ளார். ரியாத் தனது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேற்படி மூன்று நாடுகளுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்ட நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து இப்ராஹிம் ரெஸாயி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான வெறும் காகித அளவிலான […]

உலகம்

காங்கோவில் எபோலா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4000ஐக் கடந்தது

  • August 7, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000-ஐத் தாண்டியுள்ளது என அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன. உலகின் இரண்டாவது தொற்று பரவலாக இனங்காணப்பட்டுள்ள எபோலா தொற்றானது மே மாதம் நோய் நிலைமை அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உண்மையான பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட மிக அதிகமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் பொது சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில், 1,850 இறப்புகள் உட்பட, […]

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது. இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

செம்மணியில் 100 நாள் அகழ்வு: 507 எலும்புக் கூடுகள் அடையாளம்

  • August 7, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 507 ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்கள் முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்தநிலையில், இன்று 46 வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது, புதிதாக 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த 7 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், […]

உலகம்

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை கொள்வனவு செய்யும் தாய்லாந்து

  • August 7, 2026
  • 0 Comments

இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணையை கொள்வனவு செய்ய தாய்லாந்து பரிசீலித்து வருகிறது. தாய்லாந்து அரச கடற்படையின் கடல்சார் பாதுகாப்பையும் வலிமையையும் மேம்படுத்துவதற்காக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அமைப்பைக் கையகப்படுத்துவதன் மூலம், சக்திவாய்ந்த நாடுகளின் படைகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, தனது கடலோரப் பகுதிகளையும் முக்கிய கடல்வழிப் பாதைகளையும் பாதுகாத்து ஒரு சுதந்திரமான பாதுகாப்புப் படையை உருவாக்க தாய்லாந்து நம்புகிறது. இந்திய ஊடக அறிக்கைகளின்படி, இந்த ஏவுகணை அமைப்பைக் கையகப்படுத்துவதன் மூலம், சக்திவாய்ந்த நாடுகளின் படைகளைச் […]