இலங்கை செய்தி

சிறைச்சாலைகளில் நடந்தது என்ன? அரசு விளக்கம்

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருந்த அமைதியற்ற சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மகசின் மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், பள்ளன்சேன சிறைச்சாலையிலும் நிலைமை சீரடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில்:

” நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலையடுத்து மஹர சிறைச்சாலையிலும் குழப்பம் ஏற்பட்டது. அதேபோல மகசின் சிறைச்சாலையில் நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டது. இன்று காலை குருவிட்ட சிறைச்சாலையிலும், அதனைத் தொடர்ந்து பள்ளன்சேன சிறைச்சாலையிலும் அசாதாரண சூழ்நிலை உருவாகியது.

மகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். குருவிட்ட சிறைச்சாலையில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்து இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளன்சேன சிறைச்சாலையில் 30 கைதிகள் சிறைக்கூரையின் மீது ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை உணவுக்காக வெளியே வந்த கைதிகள் மீண்டும் சிறைக் கூண்டுகளுக்குள் செல்ல மறுத்தமையினாலேயே அங்கு குழப்பம் ஏற்பட்டது.

தற்போது ஏனைய சிறைச்சாலைகளில் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பள்ளன்சேன சிறைச்சாலையின் நிலைமையும் இன்னும் சில நிமிடங்களில் சீரடைந்துவிடும்” எனக் கூறினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை