ஐரோப்பா

பிரித்தானியாவில் தீவிரமடைந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டம் – ஐவர் கைது

கிழக்கு ஆங்கிலியாவில் உள்ள நார்ஃபோக் (Norfolk) கவுண்டியில் குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இதில் 05 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தெட்ஃபோர்டுக்கு(Thetford) சற்று வெளியே அமைந்துள்ள முன்னாள் இராணுவ விமானத் தளமான RAF பார்ன்ஹாமை (RAF Barnham),  இங்கிலாந்தில் தஞ்சம் கோருவோருக்கான தங்குமிடமாக மாற்ற அரசாங்கம்  முன்மொழிந்துள்ளது.

18 முதல் 65 வயதுக்குட்பட்ட திருமணமாகாத வயதுவந்த ஆண்களுக்கு இந்த இடம் தங்குமிடமாகப் பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்ததின் இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பொலிஸ் அதிகாரி மீது கல் எறியப்பட்டதாகவும், பெண் அதிகாரி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் மூன்று ஆண்கள் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவர் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்