உலகம்

கனடாவின் காட்டுத்தீயால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு – வரி விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்

  • July 18, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பெரும் பகுதிகளை மூடியுள்ள காட்டுத்தீப் புகைக்கு கனடாவே காரணம் என்று குற்றம் சாட்டிய ட்ரம்ப் அந்த நாட்டிற்கு கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், வன மேலாண்மையில் கனடா “வேண்டுமென்றே அலட்சியம்” செய்வதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அந்தப் புகை “அசுத்தமான, மாசடைந்த மற்றும் ஆரோக்கியமற்ற காற்றை” ஏற்படுத்தி, அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டொலர் இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறினார். கனடாவில் தற்போது எரிந்துகொண்டிருக்கும் 900-க்கும் […]

உலகம்

நோர்வேயில் காட்டுத்தீ பரவல் – 100 வீடுகள் தீக்கிரை

  • July 18, 2026
  • 0 Comments

நோர்வேயில் உள்ள டிராம்மன்  (Drammen) நகருக்கு அருகே நேற்று பாரிய காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் சுமார் 100 வீடுகள் தீக்கரையானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓஸ்லோவிலிருந்து சுமார் 50 கி.மீ (30 மைல்) தொலைவில் மேற்கே அமைந்துள்ள அப்பகுதியை அடர்த்தியான கருப்புப் புகை சூழ்ந்திருப்பதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள காணொளிகள் புலப்படுத்துகின்றன. இருப்பினும் மேற்படி காட்டுத்தீயினால் உயிர் இழப்புகள் ஏற்படவில்லை என மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அறுபதிற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், தீயை […]

ஐரோப்பா

ஸ்பெயினில் 12 பேரின் உயிரை பறித்த காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

  • July 12, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் அந்தலூசியாவில் பரவிய காட்டுத்தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட 1,500 பேர் வீடு திரும்பலாம் என்று அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். குறைந்த காற்று மற்றும் அதிக ஈரப்பதம் உள்ளிட்ட அமைதியான வானிலை, தீயை கட்டுக்குள் கொண்டுவர உதவியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி தீயினால் சுமார் 12 பேர் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானர்கள் வெளிநாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந்தத் தீயானது அப்பகுதி முழுவதும் சுமார் 7,000 ஹெக்டேர் பரப்பளவை சேதப்படுத்தியதாக […]

ஐரோப்பா

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத்தீ – தீயணைப்பு பணிகளில் சிக்கல்

  • July 11, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தென்கிழக்கு அல்மேரியா மாகாணத்தில், பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மேலும் பல கிராமங்கள் காலி செய்யப்பட்டு வருவதாக அவசரக்கால அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் மேலும் 23 பேர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜிய நாட்டவர்கள் என்றும், தற்போது  12 பேருக்கான பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தலூசியா […]

ஐரோப்பா

ஸ்பெயின் காட்டுத்தீ – பிரித்தானியர்கள் நால்வர் உயிரிழப்பு

  • July 10, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி 04 பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியுறவு அலுவலகம் ஸ்பெயின் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. காட்டுத்தீயில் சிக்கி எரிந்துபோன கார் ஒன்றில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நால்வர் பிரித்தானிய பிரஜைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி ஸ்பெயினில் காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

ஐரோப்பா

தெற்கு பிரான்ஸில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 10000 பேர் வெளியேற்றம்

  • July 6, 2026
  • 0 Comments

தெற்கு பிரான்சில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால் அப்பகுதியில் இருந்து 10000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத்தீயினால் 1,500 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் டூர் டி (Tour de France) பிரான்ஸ் பந்தயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை அதிகாரிகள் மதிப்பிட்டு வரும் நிலையில், தீயணைப்பு வீரர்கள் தரை மற்றும் வான்வழியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பா

ஸ்பெயினை அச்சுறுத்தும் காட்டுத்தீ – மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்

  • July 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் சுற்றுலாத் தலமான கோஸ்டா பிராவா (Costa Brava) அருகே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. லா பிஸ்பால் டி’எம்போர்டா  (  Bishop of Emporda) பகுதியில் தொடங்கிய இந்தத் தீ, பலத்த காற்றினால் வேகமாகப் பரவி வருவதாகவும் அறிவிக்கப்டப்டள்ளது. இந்நிலையில் இந்த நகரத்தை சுற்றியுள்ள  10 நகராட்சிகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடுன் சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 வான்வழி மீட்புப் படையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில்  ஈடுபட்டுள்ளனர். […]

ஐரோப்பா

கிரீஸில் காட்டுத்தீ – இருவர் உயிரிழப்பு

  • July 2, 2026
  • 0 Comments

கிரீஸில் ஃபிதியோடிடாவில் (Fthiotida) காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 135 வீரர்கள் மற்றும் 25 விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கு முந்தைய நாள் வடக்கு கிரீஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி தந்தையொருவரும் அவரது 12 வயது மகனும் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே   பிரான்ஸின் தெற்கு பகுதி முழுவதும் காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மார்சேய் (Marseille) அருகே 02 தீவிபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.  1,210 ஹெக்டேர் பரப்பளவு சேதமடைந்துள்ளதாக […]