ஐரோப்பா

காட்டுத்தீ மற்றும் வெப்பத்தில் வாழ்நாளைக் கழிக்கும் குழந்தைகள் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

  • September 21, 2026
  • 0 Comments

புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளும் என  விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பா, உலக சராசரியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது. இதனால் ஐரோப்பாவின் பெரும்பகுதி நீண்ட கால வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பாவின் வேகமான வெப்பமயமாதல் இளைய தலைமுறையினருக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று வ்ரிஜே யுனிவர்சிடேட் ப்ருஸ்ஸலின் Vrije Universiteit Brussel  புதிய ஆராய்ச்சி எச்சரித்துள்ளது.   Environmental Research Letters என்ற […]

ஐரோப்பா

ஸ்பெயினை தாக்கும் வெப்ப அலை – காட்டுத்தீ அபாயம்

  • September 4, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலையானது 43 டிகிரி செல்சியஸ் வரை   உயரக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டின் தெற்று மற்றும் மேற்கு பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தீவிர வெப்ப அலை காரணமாகக் காடுகளில் தீ விபத்து ஏற்படும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் வெப்பநிலைக்கு ஏற்றவாறு நீரேற்றத்துடன் இருக்கவும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

கிரேக்கத்தில் காட்டுத்தீ – தம்பதியர் பலி, குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்

  • August 17, 2026
  • 0 Comments

கிரேக்கத் தீவான சலாமினாவில் Salamina காட்டுத்தீயில் சிக்கி தம்பதியர் உயிரிழந்துள்ளனர். பெரிஸ்டேரியா Peristeria கிராமத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்றால் தீ குடியிருப்பு பகுதிகளுக்கு வேகமாக பரவ வழிவகுத்துள்ளது. பெரிஸ்டேரியா மற்றும் செலினா பகுதிகளில் காட்டுத்தீ அச்சம் நீடிப்பதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், கடல் வழியாக மக்களை வெளியேற்ற படகுகளைப் பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீயை அணைக்கும் பணியில் சுமார் 260 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 15 தரைப்படைகள், 10 […]

ஐரோப்பா

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – 500 பேர் கைது

  • August 16, 2026
  • 0 Comments

பிரான்ஸில் காட்டுத்தீயை மூட்டியதாக சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் வேண்டுமென்றே தீ மூட்டியதாகவும், மீதமுள்ளவர்கள் தற்செயலாக அவ்வாறு செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறார்கள். ஜூலை மாதம் போர்டோ விமான நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக 15 வயது சிறுவன் ஒருவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை குரோஷியாவின் விடுமுறைத் தளமொன்றில் கடந்த […]

ஐரோப்பா

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத்தீ – 1100 ஹெக்டேர் நிலப்பரப்பு நாசம்

  • August 14, 2026
  • 0 Comments

தென்மேற்கு பிரான்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ 1,100 ஹெக்டேர் நிலத்தை அழித்துள்ளது. அப்பகுதியிலிருந்து சுமார் 525 பேரை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரான்சின் 75 பிராந்தியங்களுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், மேற்கு ஜெர்மனியிலும் காட்டுத்தீ காரணமாக 2,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஐரோப்பா

ஸ்பெயினின் அண்டலூசியா பகுதியில் காட்டுத்தீ – களத்தில் இறங்கிய 275 வீரர்கள்

  • August 8, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தெற்கு அண்டலூசியா பகுதியில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 275 இற்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது எந்தவொரு குடியிருப்புப் பகுதிக்கும் அச்சுறுத்தல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவில் மற்றும் போர்த்துகீசிய எல்லைக்கு இடையில் தீ பரவியதாகவும், இதனால் சுமார் 4,000 ஹெக்டேர் பரப்பளவு சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலப் பணிகளுக்கான இராணுவப் பிரிவைச் சேர்ந்த அறுபது வீரர்கள், 275 தீயணைப்பு வீரர்கள், 20 விமானங்கள் மற்றும் கனரக […]

ஐரோப்பா

கிரீஸில் ஒரேநாளில் 70இற்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ பரவல்

  • August 1, 2026
  • 0 Comments

கிரீஸில் நேற்று 70 இற்கும் மேற்பட்ட  இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஏதென்ஸுக்கு மேற்கே உள்ள சில பகுதிகளில் காட்டுத்தீ வேகமாக பரவியதாகவும், இதனால் அந்த பகுதிகளில் இருந் மக்கள் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைப்பதற்காக அதிகாரிகள் நீர் குண்டு வீசும் விமானங்களை பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரேக்க தீயணைப்புப் படை அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது.  

ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் காட்டுத்தீ – ஐரோப்பா முழுவதும் பரவியுள்ள புகை!

  • July 28, 2026
  • 0 Comments

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்திய பெரும் காட்டுத்தீயிலிருந்து ஐரோப்பா முழுவதும் புகை பரவுவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. இது தொடர்பான புகைப்படத்தை  வானிலை ஆய்வு மையம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. குறித்த பதிவில், ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெரும் காட்டுத்தீ தொடர்கிறது. போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் போர்டோவிற்கு அருகில் பரவலான புகையை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. மழை நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு, மேலும் சில இடங்களில் வெப்பம் தீவிரமடையும், சில இடங்களில் வெப்பநிலை 40°C-க்கு […]

ஐரோப்பா செய்தி

காட்டுத்தீயால் திணறும் ஐரோப்பா – 80,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு சேதம்

  • July 27, 2026
  • 0 Comments

ஸ்பெயின் மற்றும் பிரான்சில் அதிகரித்து வரும் காட்டுத்தீயின் தீவிரத்திற்கு ஈடுகொடுக்க ஐரோப்பாவின் தீயணைப்புத் திறன் போராடி வருவதாகவும், தீயானது உள்ளூர் வளங்களை தொடர்ந்து திணறடித்து வருவதாகவும் ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. ஸ்பெயினில் ஏற்கனவே 80,000 ஹெக்டேருக்கும் அதிகமாகவும், பிரான்சில் 42,000 ஹெக்டேருக்கும் அதிகமாகவும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்நிலையில் இந்தத் தீ விபத்துகள் கட்டுப்படுத்தும் திறனை மீறிவிட்டன,” என்று ஒரு ஆணைய அதிகாரி இன்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த நெருக்கடியானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் பாதுகாப்பு அமைப்பு […]

ஐரோப்பா

ஸ்பெயினில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத்தீ – தேசிய அவசரநிலை பிறப்பிப்பு

  • July 24, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் நேற்று இரவு முதல் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாட்ரிட் மற்றும் அதன் அண்டை மாகாணமான அவிலாவிற்கு அருகில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்ற  நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் தேசிய குடிமக்கள் பாதுகாப்பு அமைப்புச் சட்டத்தின் கீழ், இந்த அவசரநிலை பிரகடனமானது, மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய உள்துறை அமைச்சரின் நேரடி அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்படுகிறது. ஒரே நேரத்தில் பல தீ விபத்துகள், மோசமான வானிலை, மற்றும் பல்வேறு பொது நிர்வாகங்களிடமிருந்து விரிவான […]