உலகம்

கனடாவின் காட்டுத்தீயால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு – வரி விதிப்பதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்

அமெரிக்காவின் பெரும் பகுதிகளை மூடியுள்ள காட்டுத்தீப் புகைக்கு கனடாவே காரணம் என்று குற்றம் சாட்டிய ட்ரம்ப் அந்த நாட்டிற்கு கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள அவர், வன மேலாண்மையில் கனடா “வேண்டுமென்றே அலட்சியம்” செய்வதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், அந்தப் புகை “அசுத்தமான, மாசடைந்த மற்றும் ஆரோக்கியமற்ற காற்றை” ஏற்படுத்தி, அமெரிக்காவிற்கு பில்லியன் கணக்கான டொலர் இழப்பை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

கனடாவில் தற்போது எரிந்துகொண்டிருக்கும் 900-க்கும் மேற்பட்ட காட்டுத்தீயிலிருந்து வரும் புகையால் அமெரிக்காவின் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு காற்றுத்தர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், நியூயார்க் மற்றும் சிகாகோ போன்ற நகரங்களில் உள்ள அதிகாரிகள், குடியிருப்பாளர்களை வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே ட்ரம்ப் மேற்படி தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்