ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத்தீ – தீயணைப்பு பணிகளில் சிக்கல்
ஸ்பெயினின் தென்கிழக்கு அல்மேரியா மாகாணத்தில், பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள மேலும் பல கிராமங்கள் காலி செய்யப்பட்டு வருவதாக அவசரக்கால அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் மேலும் 23 பேர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பிரிட்டிஷ் மற்றும் பெல்ஜிய நாட்டவர்கள் என்றும், தற்போது 12 பேருக்கான பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தலூசியா பிராந்தியத்தின் அவசரகாலப் பிரிவுத் தலைவர் அன்டோனியோ சான்ஸ் (Antonio Sanz), செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையில், காட்டுத்தீ “சிக்கலானதாக” இருப்பதாகவும், தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் கூறியுள்ளார்.




