ஐரோப்பா

ஸ்பெயினில் 05ஆவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ – அணைக்க பெரும் போராட்டம்

ஸ்பெயினின் அரகோன் மற்றும் காஸ்டில்லா-லா ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ இன்று 05 ஆவது நாளாக பற்றி எரிந்து வருகிறது.

ஓரேஸில் சிறிய தீப்பொறியாக பரவிய தீ தற்போது பெருமளவிலான நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. சுமார் 15,400 ஹெக்டேர் எரிந்து நாசமாகியுள்ளதகாக தெரிவிக்கப்படுகிறது.

தீயணைப்பு வீரர்கள் லூசியாவின் நுழைவாயில் பகுதியில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும் எஞ்சிய பகுதிகளில் தீ வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

தீ வேகமாக பரவி வருவதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வந்த 529 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாடலஹாராவை  (Guadalajara) அணுகுவதற்கான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குடிமைப் பாதுகாப்புத் துறை, அருகிலுள்ள குடியிருப்பாளர்களின் கைபேசிகளுக்கு ES-Alert எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அனுப்பி, தீயின் சுற்றளவிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்