ஸ்பெயினில் 12 பேரின் உயிரை பறித்த காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
ஸ்பெயினின் அந்தலூசியாவில் பரவிய காட்டுத்தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட 1,500 பேர் வீடு திரும்பலாம் என்று அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
குறைந்த காற்று மற்றும் அதிக ஈரப்பதம் உள்ளிட்ட அமைதியான வானிலை, தீயை கட்டுக்குள் கொண்டுவர உதவியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி தீயினால் சுமார் 12 பேர் உயிரிழந்திருந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானர்கள் வெளிநாட்டினர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இந்தத் தீயானது அப்பகுதி முழுவதும் சுமார் 7,000 ஹெக்டேர் பரப்பளவை சேதப்படுத்தியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.




