பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத்தீ – இரவோடு இரவாக மக்கள் வெளியேற்றம்
பிரான்சின் போர்டோ நகருக்கு மேற்கே காட்டுத்தீ கடுமையாகப் பரவியதைத் தொடர்ந்து, இரவோடு இரவாக 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்தத் தீ சுமார் 2,000 ஹெக்டேர் நிலத்தை எரித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீயைக் கட்டுப்படுத்த சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தீயின் தீவிரம் அதிகமாக இருந்தபோதிலும், இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை.




